ஜுலியன் அசாஞ், சமீப காலங்களில் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டு பிரபலமான பெயர். சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்காவுக்கு ஆப்படித்த நபர்.
பிறந்தது ஆஸ்திரேலியா என்றாலும் பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்து பயணமே வாழ்க்கை என்றொரு நிலை.படித்தது கணிதமும் இயற்பியலும் என்றாலும் நாட்டம் கொண்டது கணினியும் இணையமும்.
ஹேக்கிங் கில்லாடி:
இணையத்தில் ஹேக்கிங் என்பது 'ஒரு இணைய தளத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அதன் ஓட்டைகள் வழியே உள் நுழைந்து அதன் ரகசியங்களை மேய்வது' எனலாம். இது இளம் வயது ஜுலியனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. இதை தனது 16 வயது முதலே செய்து வந்துள்ளார். அவரது பிரபலமான முதல் ஹேக்கிங் கனடாவின் தகவல் தொடர்பு நிறுவனமான நோர்டெல்லின் ஆஸ்திரேலிய சர்வரை தன்வயப்படுத்தியது. இப்படி அவர் மீது சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டாலும் ஆதாரமில்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யும் அளவிற்கு ஆதாரமில்லாமலே ஹேக்கிங் செய்வதில் கில்லாடி.
இப்படி சென்று கொண்டிருந்த ஜுலியனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது. அரசு துறைகள் மற்றும் சமய நிறுவனங்களின் தளத்தினுள் சென்று புகுந்து புறப்பட்டு வரும் போது, அவர்களின் போலியான இன்னொரு முகம் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இவர்களின் சுயரூபத்தினை உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். ஆமாம். இப்படி உருவெடுத்தது தான் "விக்கிலீக்ஸ்".
விக்கியின் ரகசிய கசிவுகள்:
லாப நோக்கமற்ற பெயர் அறிவிக்கப்படாத நபர்களின் பங்களிப்புடன், வெவ்வேறு நாடுகளின் ரகசியங்களை,அதன் ஆவணங்களை அம்பலப்படுத்துவதே விக்கிலீக்ஸ் இணைய தளம். பல நாடுகளின் கண்டனத்திற்குண்டான போதும் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் அபிமானம் பெற்றுள்ள ஜுலியன், பல ஊடக விருதுகளையும் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளொன்றும் புறமொன்றுமாய் பொது மக்களை ஏமாற்றி வேடமிடும் அதிகாரவெறி கொண்ட அரசாங்கங்களை பொதுவில் அம்பலப்படுத்தி தோலுரிக்க வேண்டும் என்ற இவரது சிந்தனையை ஒத்த நபர்களை தேடுகிறார். இதே சிந்தனையைக் கொண்ட பல நாட்டு சட்ட வல்லுநர்கள் இணைகிறார்கள். விக்கிலீக்ஸுக்கு தன்னார்வ தொண்டாற்றும் பல ஆயிரக்கணக்கான நபர்கள் பல நாடுகளில் செயல்படுகின்றனர்.
விக்கியின் பிரபலமான கசிவு, ஆப்கன் போரில் அமெரிக்காவின் இன்னொரு முகத்தை உலகிற்கு காட்டியது. ஈராக் போரில் அமெரிக்கா என்ற சாத்தான் சாதாரண பொதுமக்களையும்,செய்தியாளர்களையும் சுட்டு தள்ளியதை விடியோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியபோது அமெரிக்கா உலகத்தின் முன் அம்மணமாக நின்றது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு நாட்டிலும் இயங்கி வரும் அமெரிக்க தூதரகங்களிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் செய்திகளை உளவறிந்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட போது, ஜுலியன் அசாஞ் நிஜமாகவே அமெரிக்காவுக்கு ஆப்படித்தார். அந்தந்த நாட்டின் முக்கிய அமைச்சர்களுக்கு "பட்ட பெயர்" வைத்து அவர்களைப் பற்றிய குறிப்புகளை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்த ஆவணங்கள் தான் அது. பின்னர் அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிற்கும் போன் செய்து "அது,உண்மையல்ல.. என்று அசடு வழிய நேர்ந்தது. ஆனால் விக்கியின் கசிவுகள் உண்மையே என்று உலகம் நம்பி வருகிறது. ஏனெனில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த அமெரிக்க அரசின் பாதுகாப்பு துறை,வெளியுறவு துறையின் இணைய தளத்தினுள் நுழைந்து அதன் ரகசிய ஆவணங்களை உளவறிவது எளிதான வேலையல்ல என்பது உலகிற்கே தெரியும், ஏன் அமெரிக்காவிற்கும் தெரியும். அதனால் தான் ஜுலியனைப் பார்த்து அமெ. பயந்தது. ஜுலியனுக்கு திருப்பி ஆப்படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஜுலியன் வேறு அமெரிக்காவை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். " எங்களால் ஒவ்வொரு வாரமும் கூட பெண்டகனின் ரகசிய ஆவணங்களை வெளியிட முடியும்" என்றார்.
இந்நிலையில், ஸ்வீடனில் ஜுலியன் மீது இருந்து வந்த பாலியல் தொடர்பான வழக்கை, ஜுலியனுக்கு எதிரான ஆயுதமாக விக்கிலீக்ஸினால் பாதிப்படைந்த அரசுகள் பயன்படுத்த துவங்கின. விளைவு ஜுலியனின் கைது. இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் வெளியில் வந்துள்ளார். ஆனால் விக்கிலீக்ஸை முடக்க முயன்ற அமெரிக்கா தோற்றுத்தான் போனது. இன்றளவும் விக்கியின் கசிவுகள் கசிந்தபடி தான் இருக்கின்றன.
"அநீதியை தடுப்பதற்கு முதல்படியே அநீதி நடக்கிறது என்பதை அறிவதே".-ஜுலியன்

கட்டுரை : பிரோஸ்கான்