இந்தியாவின் தேசிய பானம் தேநீர் என்று சொல்லுமளவிற்கு இந்தியர்கள் விரும்பி டீ யை குடிக்கிறார்கள். ஆனால் உலகில் பெரும்பான்மை மக்கள் விரும்பி அருந்துவது காப்பியைத் தான்.
காப்பி என்ற சொல் ஆங்கில வார்த்தையின் தமிழ் வடிவம் என்றாலும் காப்பியை "கொட்டை வடி நீர்" என்று தமிழ்படுத்தி நம்மை கலவரப்படுத்துகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
காப்பி என்ற சொல் ஆங்கில வார்த்தையின் தமிழ் வடிவம் என்றாலும் காப்பியை "கொட்டை வடி நீர்" என்று தமிழ்படுத்தி நம்மை கலவரப்படுத்துகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
காப்பி என்ற சொல்லின் பூர்வீகத்தை ஆராயப்போனால் அரபு மொழியில் போய் முடிகிறது. ஆமாம்.. காபி என்ற சொல் ஆட்டோமன் துருக்கி மொழியில் உள்ள "கஹ்வத்" என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். ஆனால் காப்பியின் தாயகம் எது? ஐரோப்பாவா? அல்லது அமெரிக்காவா? இல்லவே இல்லை. எத்தியோப்பியா.
காப்பிக்கு பரவலாக ஒரு கதை உண்டு. எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான ஆட்டம் அல்லது உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர். அதற்கு காரணம் காபிச் செடியின் இலைகளையும், அதன் பழங்களையும் சாப்பிட்டதின் விளைவே என்று கண்டறிந்தனர். இது நடந்ததாக நம்பப்படுவது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
எத்தியோப்பியாவிலிருந்து எகிப்து,ஏமன் என்று பரவிய காப்பி 15 ம் நூற்றாண்டு வாக்கில் தான் பெர்சியா, துருக்கி, என்று பயணித்து ஐரோப்பாவை அடைந்தது.
காப்பி விளைச்சலில் முதலிடம் வகிப்பது பிரேஸில், இரண்டாவது இடம் வியட்நாம்.
காப்பியில் "கபீன்" என்ற வேதிப்பொருள் இருப்பதால், ஒரு வகை போதையையும் அதன் விளைவாக காப்பி குடிப்பவர்களை "பழக்க அடிமை"யாகவும் மாற்றி விடுகிறது.
காப்பிச்செடியில் பல வகைகள் இருந்தாலும், பருகுவதற்கு ஏற்ற வகைகளாக "காப்பியா அராபிக்கா", " காப்பியா கன்னபோரா" இருக்கிறது.
உலகிலேயே மிக விலை உயர்ந்த காபி இந்தோனேசியாவில் தான் தயாரிக்கிறார்கள். எப்படி தயாரிக்கப்படுகிறது என்று தெரிந்தால் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும். அது "கோப்பி லுவாக்" என்று அழைக்கப்படுகிறது.
"லுவாக்" என்று அம்மொழியில் அழைக்கப்படும் ஒரு வகையான விலங்குக்கு காப்பி செடியிலுருக்கும் பழத்தைக் சாப்பிடக் கொடுக்கிறார்கள். அப்பழத்தை தின்ற அந்த விலங்கு, அதனுள் இருக்கும் காப்பிக்கொட்டை செரிமானம் ஆகாமல் பின்வாசல் வழியாக "கக்கா" செய்கிறது. அதனை எடுத்து கழுவி, சூரிய ஒளியில் உலரவிட்டு, லேசாக வறுக்கிறார்கள். இப்போது உலகின் உயர்ந்த விலை காபி தயார்.
இது சுமத்ரா, ஜாவா, பாலி தீவுகளிலும் கிடைக்கிறது. இதன் விலை எவ்வளவு? ஒரு கப் 50 டாலர் தான்.
இது சுமத்ரா, ஜாவா, பாலி தீவுகளிலும் கிடைக்கிறது. இதன் விலை எவ்வளவு? ஒரு கப் 50 டாலர் தான்.
தகவல் திரட்ட உதவியவை: விக்கிபிடியா, The most expensive site
No comments:
Post a Comment