Sunday, June 10, 2018

டங்கிர்க் (Dunkirk)



பிரான்ஸின் வடக்கே வட கடலை ஒட்டியுள்ள ஒரு கடற்கரை நகரம்.

இரண்டு உலகப்போரின் நிகழ்வுகளை தன்னுள் வரலாறுகளாக பதிந்து வைத்திருக்கும் நகரம்.

ஐரோப்பாவின் பெரும் பகுதியை கைப்பற்றியதுடன் பிரான்ஸையும் கைப்பற்றிய ஹிட்லரின் நாஜிப்படைகளை, பிரிட்டிஷ் படைகள் எதிர்க்கொண்ட கடற்கரை பகுதி இது.

இந்த நகரத்தை ஒட்டியுள்ள அழகிய கடற்கரை பகுதி Malo les bains என்று பெயர் .

பரந்து விரிந்த மணற்பரப்பை கொண்டுள்ள இந்த கடற்கரையின் மணல் தூசு போல மிக மிருதுவானதாக இருப்பது இதன் சிறப்பு.

 இங்கிருந்து ஆங்கில கால்வாயை கடந்தால், இங்கிலாந்தை அடைந்து விடலாம் பெல்ஜியம் நாட்டின் எல்லை இங்கிருந்து மிக அருகாமையில்  இருக்கிறது.

No comments:

Post a Comment