Sunday, August 25, 2019

அபுதாபி ஷேய்க் அல் ஜெய்த் பள்ளிவாசல்











உலகின் புகழ் பெற்ற அடையாளங்களில்  ஒன்றாக சமீபகால  புதிய வரவு இப்பள்ளிவாசல்.

விமானத்தில் இருந்து கழுகுப்பார்வை பார்க்கும் போதே தனியாக  தென்படுகிறது இந்த பள்ளி.

 12 ஹெக்டேர் நிலப்பரப்பில்  கட்டப்பட்டு இருக்கும் இந்த பள்ளிவாசலின்  பிரமாண்டம் மலைக்க வைக்கிறது.

இப்பள்ளியினுள் சுற்றுலா  பயணிகளை அனுமதிப்பதால் பார்வையாளர்கள் மாய்ந்து மாய்ந்து போட்டோ எடுத்து மகிழ்கிறார்கள்.

கலைநயமிக்க வேலைப்பாடுகளும் விலையுயர்ந்த கற்களின் பயன்பாடுகளும் பிரமிக்க வைக்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய தரைக்கம்பளம் இங்கு தான் விரிக்கப்பட்டுள்ளது. அது போல, உலகின் மிகப் பெரிய தொங்கும் சரவிளக்கும் இங்கு தான் இருக்கிறது.

சுமார் 40 ஆயிரம் பேர்கள் தொழும் அளவிற்கு  கொள்ளளவு கொண்டது இப்பள்ளி.

 அந்தி நேரத்தில்  சென்றதால் மஃரிப் தொழும் வாய்ப்பும் விளக்கொளியில் இப்பள்ளி  மின்னுவதையும் காண முடிந்தது.

 இந்த பள்ளிக்கு என்னை அழைத்துச் சென்று அனைத்து உதவியும் செய்த என் தம்பி Jahir Hussain க்கு நன்றி.

No comments:

Post a Comment